ராஜபக்ச குடும்பத்தில் அரசியலுக்கு வரவேண்டிய வரை இவ்வளவு காலம் மறைத்து வைத்து விட்டார்களே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் ரோஹித ராஜபக்ச குறித்து குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ரோஹித ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் வெளியே வந்து ஊடகத்திடம் கருத்து வெளியிட்ட காணொளியை பார்த்த பின்னர் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுப்ரிம் செட் செயற்கைக்கோள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று முனம் தினம் ரோஹித ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியே வந்த ரோஹித ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம், நான் நட்புறவுடன் வாக்குமூலம் வழங்கியதாகவும், அந்த திட்டத்தில் தான் செயற்பட்ட பதவி தொடர்பிலும் நிதி மோசடி விசாரணை பிரிவில் தகவல் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரோஹித அவ்வாறு அமைதியாக ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய காணொளியை பார்த்த ஜனாதிபதி மைத்திரி, இந்த பையன் ஏனைய இருவரை விடவும் மிகவும் நல்லவர். மூளையை பயன்படுத்தி வேலை செய்கின்றார். பாருங்கள் எப்படி சமாளித்து பேசுகின்றார். ராஜபக்ச குடும்பத்தில் அரசியலுக்கு அழைத்துவர வேண்டியவரை இவ்வளவு காலம் மறைத்து வைத்து விட்டார்களே என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவு தகவல்களுக்கமைய நேற்று முன்தினம் ரோஹித ராஜபக்ச நடந்து கொண்ட விதம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்களினால் கூட பாராட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை இடம்பெற்ற விசாரணைகளில் நாமல் மற்றும் யோஷித மாட்டிக்கொண்ட போதிலும் ரோஹித அழகாக தப்பியுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.