ஜெயலலிதா மரணம்: நூறு சதவீத வீடியோ ஆதாரங்கள் உள்ளது

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருப்பப்பட்டால் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.

jeyakarn

திவாகரனின் மகனான ஜெயாந்த் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி சசிகலாவிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

பணம் கொடுத்து மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தை நாங்கள் கூட்டவில்லை.

மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டால் நீதிபதியிடம் ஆதாரங்களை சமர்ப்பிப்போம்.

அதுமட்டுமின்றி ஜெயலலிதா மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோரிடம் விசாரணை நடைபெறும்.

எங்களை பொறுத்தளவில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான 100 சதவீத வீடியோ ஆதாரங்கள் உள்ளன. இதனால் தன்னைப் பற்றி புகார் கூறுவதை விட்டுவிட்டு மக்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.