டொமினிக் குடியரசிலிருந்து மியாமியை நோக்கிப் பயணித்த அமெரிக்கன் எயார்வேய்ஸ் விமானத்தின் முன் சக்கரங்களுக்கு இடையிலுள்ள இடைவெளியில் –-65 பாகை பரனைட் அளவான உறைய வைக்கும் குளிரில் மறைந்திருந்து ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரம் உயிராபத்தான பயணத்தை மேற்கொண்ட குடியேற்றவாசியொருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. டொமினிக் குடியரசைச் சேர்ந்தவரான அந்த நபர், அமெரிக்கன் எயார்வேய்ஸ் எயார்பஸ் ஏ 321 விமானத்தின் முன் சக்கரப் பகுதியிலேயே இவ்வாறு மறைந்திருந்து பயணம் செய்துள்ளார்.
அந்த விமானம் புறப்பட்டு 15 நிமிடங்களில் 22,000 அடி உயரத்தைக் கடந்ததுடன் அரை மணி நேரத்தில் 34,000 அடி உயரத்தை அடைந்தது. மேற்படி உயரத்தில் விமானத்தின் உள்ளே வெப்பநிலையும் அமுக்
கமும் முறையாகப் பேணப்படுகின்ற நிலை யில், வெளிப்பகுதியிலான வெப்பநிலை உயிராபத்து விளைவிக்கக் கூடியளவில் மிகவும் குறைவாக உள்ளதுடன் . ஒட்சிசன் வாயுவின் அளவும் காற்றழுத்தத்தின் மிகவும் தாழ்ந்த மட்டத்தில் உள்ளமை குறிப்பி டத்தக்கது.
இந்த நிலையில் விமானத்தின் முன் சக்கரப் பகுதியிலுள்ள வெப்பமான குழாய் களிலிருந்து வெளிப்பட்ட வெப்பம் காரண மாகவே அவர் உயிர் தப்ப முடிந்ததாக நம்பப்படுகிறது.
மியாமியில் விமானம் தரையிறங்கியதும் அந்நபர் பிராந்திய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி அவர் எவ்வாறு டொமினிக் குடியரசிலுள்ள லாஸ் அமெரிகாஸ் சர்வதேச விமான நிலையத்தில் புறப்படுவதற்கு தயாராக தரித்திருந்த அந்த
விமானத்தின் முன் சக்கர பகுதிக்குள் ஏறிமறைந்து கொண்டார் என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண் டுள்ளனர்.