ரசிகர்கள் ஒரு சில நடிகைகளை மறக்கவே மாட்டார்கள். அப்படி சொல்ல வேண்டும் என்றால் நடிகை நஸ்ரியாவை சொல்லலாம். இவர் மறுபடியும் எப்போது நடிக்க வருவார் என்று ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் பலர்.
ஆனால் அவரோ சில படங்கள் மட்டும் நடித்துவிட்டு திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். இந்த நிலையில் அவரது கணவரும், நடிகருமான பகத் பாசில் ஒரு பேட்டியில், நஸ்ரியா மீண்டும் நடிக்க இருக்கிறார், அதுவும் மலையாள படத்தில் தான் என்று கூறியிருக்கிறார்.
இந்த தகவல் ரசிகர்கள் செம குஷியை தந்துள்ளது, அப்படியே அவர் தமிழிலும் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.