21ஆம் நாளான இன்று வைரவேலன் தங்க ரதத்தில் ஜொலிக்கின்றான்.

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 21ஆம் நாளான இன்று வைரவேலன் தங்க ரதத்தில் ஜொலிக்கின்றான்.

21ஆம் நாளான இன்று காலை கஜவல்லி மஹாவல்லி உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து இன்று மாலை தங்க ரதத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானின் வேல்விமான திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது.

கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும்.

இந்த திருவிழாவை காண நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகின்றமை சிறப்பம்சமாகும்.

இந்தநிலையில் எதிர்வரும் 19-08-2017 சனிக்கிழமை சப்பறத் திருவிழாவும், 20-08-2017 ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும், 21-08-2017 திங்கட்கிழமை தீர்த்தத் திருவிழாவும், 22-08-2017 செவ்வாய்க்கிழமை பூங்காவனத் திருவிழாவும், 23-08-2017 புதன்கிழமை வயிரவர் உற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.