40 ஆண்டுகளுக்கு முன்பு நாசா செய்த தவறு இன்று உலகின் மாபெரும் அச்சறுத்தல்.!

ஸ்பேஸ் வார் (Space War) அதாவது விண்வெளி வளர்ச்சிப்போட்டி காலகட்டத்தில் தொடங்கி இன்று வரை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, பல்வேறு வகையான ஆய்வுகளை அடிப்படையாக கொண்ட பல வகையான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.

பூமியின் சுற்று வட்டப்பாதை தொடங்கி ஜூப்பிட்டர் கிரக சுற்றுவட்டபாதை வரை எங்கும் பரவி கிடக்கும் செயற்கைகோள்கள் – பூமியின் நலனுக்காகத்தான், மனித இனத்தின் வளர்ச்சிக்காகத்தான் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை இன்றொரு மாற்றிக்கொள்ளுங்கள்.

40 ஆண்டுகளுக்கு முன்பு நாசா செய்த தவறு இன்று மாபெரும் அச்சறுத்தல்.!

சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு நாசா செய்த ஒரு தவறு இன்று உலகிற்கும் அதன் வாசிகளுக்கும் ஒரு மாபெரும் அச்சறுத்தலாய் உருமாறியுள்ளது, அதென்னது.?

1977 செப்டம்பர் 5-ஆம் தேதியன்று

 

1977 செப்டம்பர் 5-ஆம் தேதியன்று

வாயேஜர் 1 என்பது 1977-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதியன்று நாசாவினால் விண்ணில் ஏவப்பட்ட ஒரு விண்வெளி ஆய்வு கலம் ஆகும். வெளிப்புற சூரிய மண்டலத்தைப் பற்றி ஆய்வு செய்யும் நோக்கம் கொண்டு, வாயேஜர் திட்டத்தின் ஒரு பகுதியாக வாயேஜர் 1 செலுத்தப்பட்டது.

20.6 பில்லியன் கிலோமீட்டர்

 

20.6 பில்லியன் கிலோமீட்டர்

2017-ஆம் ஆண்டு மே மாதத்தின் புள்ளிவிவரத்தின் படி, வாயேஜர் 1 பூமியில் இருந்து சுமார் 137.8 வானியல் அலகுகள் (பூமி-சூரிய தொலைவு) தொலைவில் அதாவது சுமார் 20.6 பில்லியன் கிலோமீட்டர் அல்லது 12.8 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது.

டீப் ஸ்பேஸ் நெட்வர்க்

 

டீப் ஸ்பேஸ் நெட்வர்க்

நேற்றுவரை அதாவது ஆகஸ்ட் 16, 2017 அன்று வரை, 39 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 11 நாட்கள் என ஆய்வை மேற்கொள்ளும் இந்த விண்கலம் டீப் ஸ்பேஸ் நெட்வர்க் (Deep Space Network) வழியாக தொடர்ந்து வழக்கமான கட்டளைகளைப் பெற்றும், சேகரித்த தரவுகளை அனுப்பியும் வருகிறது. இந்த வாயேஜர் 1 ஆய்வு கலம் தான் நாசாவினால் நிகழ்த்தப்பட்டுள்ள ஒரு திட்டமிடப்படாத தவறு என்றால் நீங்கள் நம்புவீர்களா.?

ஒரு தங்க வட்டு ஆகும்

 

ஒரு தங்க வட்டு ஆகும்

சுருக்கமாக கூறினால் நாசாவின் இந்த வாயேஜர் 1 என்பது பூமி வாழ்வின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஒலிகள் மற்றும் படங்கள் கொண்ட ஒரு தங்க வட்டு ஆகும்.

எங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்கிறது

 

எங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்கிறது

அதுமட்டுமின்றி இந்த வட்டு நமது பூமி கிரகத்தின் இருப்பிடம் காட்டும் ஒரு வரைபடத்தையும் கொண்டிருக்கிறது. அந்த வரைப்படம் நாசா எங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்கிறது என்பது பற்றி கூடுதல் நிலப்பரப்புகளைப் புரிந்து கொள்ள அனுமதிக்கிறது.

எவ்வளவு தூரம் பயணித்துள்ளது

 

எவ்வளவு தூரம் பயணித்துள்ளது

அதாவது இது எங்கிருந்து வருகிறது மற்றும் எவ்வளவு தூரம் பயணித்துள்ளது என்பதை வாயேஜர் 1 தெளிவாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதையேதான் அந்த வரைபடங்களை உருவாக்கிய அமெரிக்க வானியலாளரான பிராங்க் டிரேக் அவர்களும் “இந்த விவரங்களை குறிக்கும் ஏதாவது ஒன்றை வாயேஜர் 1 மீது நாசா பொறுத்த நினைத்தது” என்று கூறுகிறார்.

நாடோடித்தன்மை கொண்ட எக்ஸ்டராடெரஸ்ட்ரியல்ஸ்

 

நாடோடித்தன்மை கொண்ட எக்ஸ்டராடெரஸ்ட்ரியல்ஸ்

இந்த வரைபடம் நம்மை எவ்விதமான ஆபத்துக்களுக்குள் சிக்க வைக்கும் என்பதை இந்நேரம் நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆம், வளங்கள் நிறைந்த வேறு கிரகங்களை தேடித்தேடி அலைந்து அடையும் நாடோடித்தன்மை கொண்ட எக்ஸ்டராடெரஸ்ட்ரியல்ஸ் எனப்படும் வேற்றுகிரக வாசிகளுக்கு பூமியை தாக்க மற்றும் கைப்பற்ற உதவ வாயேஜர் 1 விண்கலத்தை விட மிக எளிமையான வழி கிடைக்கவே கிடைக்காது.

நன்மைகள் மற்றும் தீமைகள்

 

நன்மைகள் மற்றும் தீமைகள்

விண்வெளிக்கு வரைபடங்களை நாசா அனுப்ப என்ன காரணம் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பிய போது “இந்த விண்கலம் செலுத்தப்பட்ட நேரத்தில் மக்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர் மற்றும் வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வதில் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி யாரும் விவாதிக்கவில்லை” என்று பதிலளித்துள்ளது.

சிக்கினால் என்னவாகும்.?

 

சிக்கினால் என்னவாகும்.?

மறுகையில் வேற்றுகிரக வாசிகளிடம் அந்த வரைபடம் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றும், வாயேஜர் 1 வழக்கம்போல எப்போதும் விண்மீன்களுக்கு இடையே விண்வெளியில் அமைதியாக பயணிக்கும் என்றும் நாசா நம்புகிறது. ஒருவேளை சிக்கினால் என்னவாகும்.?

எந்த அளவிலான ஆபத்தை கொண்டது

 

எந்த அளவிலான ஆபத்தை கொண்டது

வேற்றுகிரக வாசிகளுக்கு செய்திகள் அனுப்புவது சார்ந்த நெறிமுறைகளை பற்றிய ஆய்வில் ஈடுபட்டுவரும் யார்க் பல்கலைக்கழகத்தின் கார்டன் டென்னிங்கை பொறுத்தவரை “பல்சர் வரைபடத்தை உருவாக்கிய டிரேக் மற்றும் கார்ல் சாகன் மற்றும் வாயேஜர் 1 அணி முழுவதுமே வேற்றுகிரகவாசிகள் தொடர்பு சார்ந்த எந்த விதமான யோசனைகளையும், விவாதங்களையும் கொண்டிருக்கவில்லை. ஆனால், இப்போது உலகம் முழுவதும் விஞ்ஞானிகளிடமிருந்தும், பல்வேறு வகையான பங்குதாரர்களிடமிருந்தும் இந்த விடயம் எந்த அளவிலான ஆபத்தை கொண்டது என்பது பற்றிய பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது” என்கிறார்.

ஸ்டீபன் ஹாக்கிங் திரும்பத் திரும்ப எச்சரித்தார்

 

ஸ்டீபன் ஹாக்கிங் திரும்பத் திரும்ப எச்சரித்தார்

புத்திஜீவித்தனமான வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வதில் உள்ள ஆபத்துகளைப் பற்றி பிரபல இயற்பியலாளர் ஆன ஸ்டீபன் ஹாக்கிங் திரும்பத் திரும்ப எச்சரித்தார் என்பதும், அவர் “வேற்றுகிரக வாசிகள் நம்மை அறிந்துகொண்டால், கொலம்பஸ் அமெரிக்காவில் தரையிறங்கி பூர்வீக அமெரிக்கர்களை காணாமல் ஆக்கியது போன்றதொரு நிகழ்வு நாடாகும்” என்றும் கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.