பிரித்தானியாவில் Uber டெக்ஸி சாரதியாக பயணியாற்றும் நபரின் மகள் லண்டனில் உள்ள மிக சிறந்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.
லண்டன் School of Economics என்ற பாடசாலையில் சட்டம் பயிலும் Saadia Sajid என்ற மாணவி முதல் தர சித்தியை பெற்றதன் காரணமாக பல்கலைக்கழக வாய்ப்பை பெற்றுள்ளார்.
18 வயதான குறித்த மாணவி பொருளாதார பாடத்தில் A சித்தியையும், வரலாறு பாடத்தில் A சித்தியையும் அரசியல் பாடத்தில் A சித்தியை பெற்றுள்ளார்.
இந்த மாணவி செப்டெம்பர் மாதம் தனக்கான இடத்தை பெற்றுக் கொள்ளும் போது நாட்டிலுள்ள பிரகாசமான மாணவர்களுடன் தோள் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Saadia கிழக்கு லண்டனில் உள்ள நியூஹாம் கல்லூரியின் ஆறாவது பிரிவு மாணவியாகும்.
அந்த பாடசாலையின் குறிப்பிடத்தக்க 95 சதவீத மாணவர்களில் அமெரிக்காவிலுள்ள MIT மற்றும் Oxbridge பல்கலைக்கழங்களிலும் அந்த மாணவி இடங்களை வென்றுள்ளார்.
அந்த மாணவி டெக்ஸி சாரதியான 64 வயதுடைய Sajid என்பவரின் மகளாகும். பிரபல பல்கலைக்கழகத்திற்கு மகளை அனுப்பும் இலட்சியத்திற்காக நீண்ட நேரம் அவரது தந்தை பணி செய்து வருகின்றார்.
“எனது தந்தை எனக்காக முழுமையான ஆதரவுகளை வழங்கினார். பணம் மற்றும் நேரத்தை எனது கனவிற்காக முழுமையாக தியாகம் செய்தார்.
எனது அம்மாவை போன்று எனது தந்தை என்னால் தற்போது பெருமையடைந்துள்ளார். என்னால் இந்த வாய்ப்பினை நம்ப முடியவில்லை்” என குறித்த மாணவி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.