பிரித்தானியாவின் அதிபயங்கர விமானம் தாங்கி போர்க்கப்பல்!

பிரித்தானியாவின் அதி பயங்கர விமானம் தாங்கி போர்க் கப்பல் என கருதப்படும் HMS Queen Elizabeth முதன் முறையாக Portsmouth துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

british

பெரும் பொருட் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கப்பலை ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு பிரித்தானிய கொடிகளை அசைத்து வரவேற்றிருந்தனர்.

HMS Queen Elizabeth கப்பலில் சுமார் 700 படையினர் வந்திருந்ததாகவும், அவர்களுக்கும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கப்பலானது கட்டப்பட்ட நாள் முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக Portsmouth துறைமுகத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில், குறித்த கப்பலை சீர்செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதனை தொடர்ந்து 2020ஆம் ஆண்டு முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

65,000 டன் நிறையுடைய இந்த கப்பல் 280 மீற்றர் நீளமுடையது என தெரிவிக்கப்படுகின்றது. சுமார் F35 ரக ஜெட் விமானங்கள் 30 ம், 14 ஹெலிகொப்டர்களையும் இந்த கப்பலில் நிறுத்தி வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏவுகணை, நீர்மூழ்கி கப்பல் மற்றும் விமான தாக்குதலில் இருந்து பாதுகாக்க கூடிய வல்லமையை இந்த கப்பல் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லண்டனில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் Portsmouth சென்ற பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, குறித்த கப்பலின் தளத்தில் இறங்கி அந்த கப்பலை வரவேற்றதுடன், அனைவரையும் சந்தித்து உரையாடியிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.