ஹோமங்கள் நடைபெறும் பொழுது, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையைத் தொடங்குவர். வீடுகளில் மண்ணில் பிள்ளையார் செய்து, அதில் வண்ணம் தீட்டியும் வழிபாட்டுக்கு வைத்துக்கொள்வர். வெண்கலப் பிள்ளையார், வெள்ளிப் பிள்ளையார், வெள்ளைப் பிள்ளையார், வேப்பமரப் பிள்ளையார், வெள்ளருக்குப் பிள்ளையார் என்று பலவகை பிள்ளையார்களை மக்கள் வழிபடுவது வழக்கம். எந்த வகைப் பிள்ளையாருக்கு என்ன பலன் என்பதைப் பற்றியும், முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
மஞ்சள் பிள்ளையாரை வழிபட்டால் திருமணத் தடை அகலும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும்.
மண்ணால் ஆன பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபட்டால் அரச பதவி கிடைக்கும். அரசாங்க வேலை அமையும்.
புற்றுக்கு அருகில் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வியாபார விருத்தி ஏற்படும்.
வேப்பமரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வெற்றி உண்டாகும்.
அரசமரத்தடியின் கீழ் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வாரிசு உருவாகும்.
கண்திருஷ்டி கணபதியை இல்லத்து முகப்பில் வைத்தால் திருஷ்டி தோஷம் போக்கும்.