இன்றைய ராசிபலன் (18.08.2017)

  • மேஷம்

    மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி  வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். வெற்றி பெறும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களால் உதவிகள் உண்டு. பண வரவு திருப்தி தரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள்.  உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். பழைய கடன்  பிரச்னை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பொறுமைத்  தேவைப்படும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. உடல் அசதி, சோர்வு வந்து போகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி  வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து  உயரும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். இனிமையான நாள்.

  • கன்னி

    கன்னி: சாதுர்யமாக பேசுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களிடம் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி  செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள்  பலிதமாகும் நாள்.

  • துலாம்

    துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளி போன காரியங்கள் இன்று முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக சில  பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உறவினர்,  நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

  • தனுசு

    தனுசு: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில்  எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • மகரம்

    மகரம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உேத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  தொட்டது துலங்கும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.  வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். கனவு நனவாகும் நாள்.

  • மீனம்

    மீனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். திடீர் சந்திப்புகள் நிகழும். நட்பு வட்டம் விரியும். வியா
    பாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.