மத்தள விமான நிலையத்தின் அதிக பங்கை கோரும் இந்தியா: இன்று பேச்சுவார்த்தை ஆரம்பம்

மத்தள விமான நிலையத்தை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

download (1)

மத்தள விமான நிலையத்தை குத்தகைக்கு விடப்படும்போது அதில் 49.5 வீத பங்கை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கான யோசனை இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், அதற்கு அதிகமான பங்கு இலாபத்தை இந்திய நிறுவனம் கோருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பாக இணக்கப்பாடொன்று வரும் நோக்கில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்திய நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு இடையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.