பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் கிரிஷாந்த் டி சில்வா, இராணுவ மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, இராணுவத் தளபதி லெப்டின்னன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவை இராணுவத் தலையகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.
பாதுகாப்பு படைகளின் பிரதானியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன நியமிக்கப்படவுள்ளதாக நேற்றிரவு தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், நேற்றைய தினம் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, இராணுவ மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரை சந்தித்துள்ளார்.