உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜனவரி மாதம் நடத்தப்படும் – மஹிந்த அமரவீர

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என மீன்பிடித்துறை நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

mahinda

கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்துவது குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றில் நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் தினத்தை தேர்தல் ஆணைக்குழு தலைவரினால் அறிவிக்க முடியும்.

இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் பல்வேறு ஊகங்களை காலத்திற்கு காலம் வெளியிட்டு வருகின்ற போதிலும் இதுவரையில் திடமான ஓர் திகதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னரும் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி பற்றிய ஊகங்களை வெளியிட்டிருந்தார்.