நாகரீகத்தின் வேகத்தில் கால ஓட்டத்திற்கு ஏற்ப மனிதனின் வாழ்விடங்களும் மாற்றம் பெற்றுகின்றன என்பது உண்மை. அந்த வகையில் வாழ்விடமான வீடுகள் காலத்திற்கு காலம் பல்வேறு படிவங்களில் மாற்றம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அண்மையில் முட்டை வடிவிலான நீரிலும், தலையிலும் பயன்படுத்தக்கூடிய அசையும் வீடொன்றினை, ஸ்லோவோக்கியா நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
மேலும், குறித்த வீட்டிற்று எக்கோ கேப்சூல்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இது நீரில் மிதக்கும் அதே வேளை தரையிலும் பயன்படுத்தக்கூடிய அசையும் வீடாகும். இது அவசர உலகிற்கு மிக அவசியமானதும் பயன்பெறும் வீடாகும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.