விபச்சாரத்துக்கு தள்ளப்பட்ட மாணவி

தோம்பே பிரதேசத்தில் வசித்து வரும் 17 வயதுடைய மாணவியை விபச்சார தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதியையும் ஆதரவளித்ததாக கூறப்படும் 56 வயதுடைய பெண்ணையும் வலான குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

stu

குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த மாணவியை  காப்பாற்றுவதற்காக அதிகாரி ஒருவர் வாடிக்கையாளர் போல முச்சக்கரவண்டி சாரதிக்கு தொலைப்பேசியில் அழைப்பை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

சாரதியிடம் பெற்றுக்கொண்ட தகவல்களுக்கமைய மல்வானை பிரதேசத்திற்கு மாணவியை  அழைத்து வருமாறு அதிகாரி கூறியுள்ளார்.

தொலைப்பேசி அழைப்பிற்கேற்ப முச்சக்கரவண்டி சாரதி குறித்த மாணவியையும்  மற்றுமொரு பெண்ணையும்  அழைத்துக் கொண்டு மல்வானை பிரதேசத்திற்கு வந்துள்ளார்.

மாணவியோடு அழைத்து வந்த பெண்ணை சிறுமியின் தாயார் என முச்சக்கர வண்டி சாரதி அறிமுகப்படுத்தியுள்ளார்.

வலான குற்றத் தடுப்பு பிரிவினரின்  திட்டத்தின் படி சிவில் உடையில் தயாராக இருந்த அதிகாரிகள் முச்சக்கரவண்டியை நிறுத்தி மூவரிடமும் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு மூவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் பியகம பொலிஸில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை வலான குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.