ஜெர்மனியில் கத்தி குத்து தாக்குதல் ஒருவர் பலி – ஒருவர் காயம்

ஜெர்மனியின் Wuppertal பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

201611161002293560_Germany-raiding-mosques-and-flats_SECVPF

சம்பவ இடத்திற்கு பொலிஸ் விசேட பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த பகுதியின் பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற தகராறில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பலர் ஈடுபட்டிருந்தார்களா என்பது தொடர்பில் பொலிஸ் தெளிவாக தகவல் அறியவில்லை.

பின்லாந்தின் Turku பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக செய்திகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பின்லாந்தில் இடம்பெற்ற கத்து குத்து தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.