உயிரிழந்த நிலையில் யானை மீட்பு

வவுனியா பாலமோட்டை பகுதியில் உயிரிழந்த நிலையில் யானையொன்று மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா பாலமோட்டை, ஊரல்குளத்தில் யானை ஒன்று இறந்து காணப்பட்டதை அவதானித்த ஊர் மக்கள் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இதனை அடுத்து ஓமந்தை பொலிஸாரும், வன ஜீவராசிகள் திணைக்களமும் சம்பவ இடத்துக்கு சென்றதுடன், வன ஜீவராசிகள் திணைக்கள வைத்திய அதிகாரியால் யானை இறந்தற்குரிய காரணம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இவ் மருத்துவ அறிக்கையின் படி ஐந்து வயதுடைய யானை வெங்காய வெடியினை உண்டதனால் வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக உணவு உண்ண முடியாமல் இறந்துள்ளதென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானை 7 நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என வன ஜீவராசிகள் திணைக்கள வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.