வவுனியாவில், வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் சடலம் இன்று காலை சமயபுரம் அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள அவரது வீட்டின் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கட்டார் நாட்டிலிருந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த இளைஞன் வழமையை போன்றே வீட்டில் இருந்துள்ளார்.
எனினும் இன்று அதிகாலை இளைஞன் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர். மாரிமுத்து பிரசாந்தன் எனும் 26 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.