சாவகச்சேரியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார்.
வீட்டில் பறித்த தேங்காயை விற்பனை செய்வதற்கு சந்தைக்குக் கொண்டு சென்றவர் டிப்பருடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
இந்த விபத்து இன்று காலை சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு முன்னால் நடந்தது.
சைக்கிளில் தேங்காய் மூடையைக் கட்டிக் கொண்டு சாவகச்சேரி பொதுச் சந்தைக்குச் சென்றவரை, எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதித் தள்ளியது.
இந்த விபத்தில் தோப்பு ஒழுங்கை மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சிவராஜா( வயது 50) என்பவரே உயிரிழந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.