நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரி லலித் ஷாந்தவின் மகளின் திருமணத்திற்கு 50 VAT 69 விஸ்கி போத்தல்களை வழங்கினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக போலி குற்றச்சாட்டு சுமத்தி விளக்கமறியலுக்கு அனுப்ப முயற்சிக்கும் நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரியின் மகளுக்கே இவ்வாறு வழங்கினோம் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு 50 போத்தல் தானும் தனது சகோதரர் யோஷிதவும் பரிசாக வழங்கினோம் எனவும் அதனை ஊடகத்தின் முன்னால் வெளிப்படுத்துவதற்கு தயார் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு களுத்துறையை சேர்ந்த பொலிஸ் உப பரிசோதகர் லலித் ஷாந்தவின் வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றதாக நாமல் கூறியுள்ளார்.
நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் அந்த திருமண வீட்டிற்கு சென்று VAT 69 விஸ்கியை அருந்திய காணொளி ஒன்றும் தங்களிடம் உள்ளதாகவும், தான் மற்றும் தனது சகோதரர் இதனை ஊடகத்தில் வெளிப்படுத்த தயார் என நாமல் தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் விளக்கமறியலுக்கு செல்ல நேரிட்டால், நிதி மோசடி விசாரணை பிரிவின் அதனை அதிகாரிகளினதும் உண்மை தகவல்களை ஊடகத்திடம் வெளிப்படுத்துவதற்கு ஒரு போதும் தயங்கப்போவதில்லை என நாமல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.