நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிக மழை வீழ்ச்சி காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.