2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி நேரடியாக தகுதி பெற வேண்டுமாயின் இந்தியாவுடனான ஒருநாள் தொடரின் இரு போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அந்தவகையில் இலங்கை- இந்திய அணிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க போட்டித் தொடர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமல் மற்றும் லகிரு திரிமான்னே ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டு, திஸர பெரேரா, சாமர கப்புகெதர மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் இவ்விரு அணிகளுக்கும் இடையே இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.<