கண்களின் நிறத்தினை வைத்தே ஒருவருடைய குணநலன்கள் மற்றும் எதிர்காலத்தை பற்றி எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
நீல நிறமுள்ள கண்கள்
நீல நிறத்தில் கண்கள் இருப்பது மிகவும் அபூர்வமானது. அத்தகையவர்கள் மிகவும் ரொமாண்ட்டிக்கானவர்கள். மேலும் இவர்கள் தனிமையை அதிகம் விரும்புவார்கள்.
பச்சை நிறமுள்ள கண்கள்
பச்சை நிறத்தில் கண்கள் இருப்பதும் மிகவும் அபூர்வமானது தான். இவர்கள் தனித்தன்மை வாய்ந்தவராக இருப்பார்கள். இயற்கை மீது அளவில்லா நம்பிக்கை மற்றும் பற்றினை கொண்டிருப்பதுடன் கருணை மிக்கவராக திகழ்வார்கள்.
பழுப்பு நிறமுள்ள கண்கள்
பழுப்பு நிறக் கண்கள் உலகில் 55 சதவீதம் பேருக்கு இருக்கும். இவர்கள் எதையும் எளிதாக அணுகும் மனப்பக்குவம் கொண்டவர்கள். ஆனால் பலரும் அதை சரியாக கையாள்வதில்லை.
பூனைக் கண்கள்
பூனையின் கண்களை போன்று உள்ளவர்கள், சிறிய பிரச்சனைகளுக்கு கூட துவண்டு விடுவார்கள். படிப்பில் ஆர்வம் குறைவாகத் தான் இருக்கும். ஆனால் இவர்கள் எப்போதும் அழகுணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள்.
கருப்பு நிறமுள்ள கண்கள்
கருப்பு நிறத்தில் கண்கள் உள்ளவர்கள், ரகசியங்களை பாதுகாக்கும் பெட்டகமாக இருப்பார்கள். அனைவரது கவனத்தையும் சட்டென கவர்ந்திழுப்பார்கள். பொழுதுபோக்குகளில் அதிக நாட்டமுடைய இவர்களுக்கு பணத்தேவை அதிகமாக இருந்து கொண்டேயிருக்கும்.