தமிழில் அஜித், விஜயகாந்த், விஜய், சூர்யா, தெலுங்கில் சிரஞ்சீவி, ஹிந்தியில் அமீர்கான் என எல்லா மொழி திரைப்படங்களின் மாஸ் ஹீரோக்களின் படங்களை இயக்கி, அவற்றை சூப்பர் ஹிட்டாக்குவதோடல்லாமல் அந்த ஹீரோக்களை மாஸ் இமேஜை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்பவர்தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஸ்பைடர் படத்தை இயக்கியுள்ளார். மகேஷ்பாபு தமிழில் முதல் முறையாக நேரடியாக நடித்து அறிமுகமாகும் படம் இது.
செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் ப்ரோமோஷன்கள் களைகட்ட ஆரம்பித்துள்ளன. மகேஷ்பாபுவின் முதல் தமிழ் படம் என்பதால் அவரை அறிமுகப்படுத்தும் விழா ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த விழாவில் முருகதாஸின் ஹீரோக்கள் விஜய், அஜித், சூர்யா, சிரஞ்சீவி, அமீர்கான் என அனைவரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.







