ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, அவரது இறுதிச் சடங்கு நிகழ்வுகளை செய்தவர் ஸ்ரீரங்கம் பட்டர் தேவாதி.
இவர் கடந்த 3 நாட்களாகச் சென்னையில்தான் தங்கியிருக்கிறார்.
சசிகலா வீட்டிற்கு சென்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கிறார்கள்.
நான் அரசியல் பேசுவதற்கு போகவில்லை. பூஜை செய்வதற்காகத்தான் போகிறேன் என்று தேவாதி சொல்லியிருக்கிறார். அதன் பிறகு போலீசார் அவரை அனுமதித்துள்ளனர்.
அதன் பின்னர், ஸ்ரீரங்கம் பட்டர் தேவாதி காலில் விழுந்து சசிகலா ஆசிர்வாதம் வாங்கி இருக்கிறார்.
அப்போது, ஸ்ரீரங்கம் பட்டர் தேவாதி சசிகலாவிடம், ஜெயலலிதாவிற்கு நீங்கள்தான் இறுதி சடங்கு நிகழ்வுகள் செய்தீர்கள். அதன் பிறகு அவருக்கு செய்யவேண்டிய சடங்குகள் இன்னும் செய்யப்படாமல் இருக்கிறது.
‘அப்படி செய்யாமல் இருப்பது உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் நல்லது இல்லை. உங்களோட இந்த நிலைக்கும்கூட அதுதான் காரணம்’ எனச் கூறியிருக்கிறார்.
அந்த சடங்குகளை உடனே செய்து விடுவதாக சசிகலா சொல்லியிருக்கிறார்.
அதற்கு ஸ்ரீரங்கம் பட்டர் தேவாதி, இந்த சடங்குகளை “ஆற்றங்கரையிலோ அல்லது ஜெயலலிதா வாழ்ந்த வீட்டிலோ தான் செய்யவேண்டும்.
ஆனால், அது தற்போது முடியாது என்பதால், இந்த வீட்டிலேயே செய்து விடலாம்” என சொல்லி இருக்கிறார்.
சசிகலா அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
அதன் பிறகு, ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றிலிருந்து ஒன்பது கலசங்களில் தண்ணீர் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
சசிகலாவை மட்டும் உட்கார வைத்து சுமார் இரண்டு மணி நேரம் பூஜை நடத்தியிருக்கிறார் ஸ்ரீரங்கம் பட்டர்.
அதனோடு, ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைவதற்காகவும், சில பூஜைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
அந்த தீர்த்தத்தை, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம், மற்றும் ஜெயலலிதா சமாதியிலும் தெளிக்க வேண்டும் என்று ஸ்ரீரங்கம் பட்டர் சொல்லியிருக்கிறார்.
அதற்கான ஏற்பாடுகளை, போயஸ் கார்டன் வீட்டு வாசலில் உள்ள விநாயகருக்கு தினமும் பூஜை செய்ய வரும் அர்ச்சகரை வைத்து சசிகலா தரப்பினர் செய்துள்ளார்கள்.
அந்த அர்ச்சகர், ஜெயலலிதா வீட்டிலும், சமாதியிலும் தீர்த்தத்தை தெளித்து விடுவதாக கூறியிருக்கிறார்.
“ஜெயலலிதாவுக்குச் செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் முழுமையாகச் செய்யப்பட்டுவிட்டதால், இனி நல்லது நடக்கும்” என்று சசிகலா நம்புகிறாராம்.