மகிந்தவின் மகன் ரோஹித்த ராஜபக்சவின் கல்வி தகுதி தொடர்பில் சிக்கல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்விசார ஊழியர் என பல்கலைக்கழகத்தின் பணியாளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Rohitha-Rajapaksa

விண்வெளி துறைசார்ந்த பொறியிலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ள ரோஹித்த ராஜபக்ச, பல்கலைக்கழகம் ஒன்றில் கல்விசார ஊழியராக பணியாற்றுவது சிக்கலுக்குரியது என்பதுடன் அவரது கல்வி தகுதி சம்பந்தமாகவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பணியாளர்கள் பட்டியலில் ரோஹித்த ராஜபக்சவின் பெயர் இருந்தாலும் பல்கலைக்கழகத்தின் பணிகளில் அவர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுப்ரிம் சேட் செய்மதி விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறித்து ஊடகங்கள் மூலம் மாத்திரமின்றி வேறு திட்டங்கள் ஊடாகவும் விரிவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு செலவிட்ட நிதி சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு ரோஹித்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்டது.

இலங்கையின் முதலாவது செய்மதி எனக் கூறப்பட்ட அந்த திட்டக்குழுவில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் நண்பரான மதிவாணன் என்பவரும் இருந்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அவரை லித்துவேனியா நாட்டுக்கான இலங்கை ராஜதந்திரியாக நியமித்துள்ளது.

ரோஹித்த ராஜபக்ச இந்த திட்டத்தின் ஊடாக செலவிட்ட பணம் சம்பந்தமாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மதிவாணனை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ராஜதந்திர சேவையில் வைத்திருப்பது சிக்கலுக்குரியது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்