ஆறாம் நூற்றாண்டுக்குரிய பைசான்டைன் நாணயத்தினால் உருவாக்கப்பட்ட அரிய தங்கப் பதக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தங்கப் பதக்கம் உருவாக்கப்பட்டு சுமார் 1500 ஆண்டுகள் கடந்திருக்கும் என கண்டுபிடிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பதக்கத்தில் ஜஸ்ரினியன் பேரரசின் உருவம் பதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தங்கப் பதக்கம் கொன்ஸ்தான்துனோபிலில் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் முன்னர் கொன்ஸ்தான்துனோபில் என்று அழைக்கப்பட்டது. இது கி.பி. 324 இல் ரோமானிய அரசின் தலைநகராகவும் காணப்பட்டது.
மேற்படி அரிய தங்க பதக்கம் நோர்போக் அட்லாபரோ அருகில் கோட்பிரே பிராட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நோர்போக் வரலாற்றுச் சுற்றுச் சூழல் பதிவு மற்றும் மாவட்ட அருங்காட்சியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த தங்கப் பதக்கமானது உயர்தர தங்கத்தினால் தயாரிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.