இளம் தாயொருவரின் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊவா பரணகம, திம்புலன பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
33 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப பிரச்சனை காரணமாக குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஊவா பரணகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.