புத்தளம் சீமெந்துத் தொழிற்சாலையில் தீவிபத்து

புத்தளம் சீமெந்துத் தொழிற்சாலையில் நேற்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

fire1_02364

புத்தளத்தில் அமைந்துள்ள சீமெந்துத் தொழிற்சாலை வளாகம் தற்போது பாரிய குப்பை சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சி மையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நேற்று குறித்த தொழிற்சாலை வளாகத்தில் திடீரென்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மீள்சுழற்சிக்கான குப்பைகள் குவிக்கப்பட்டிருந்த கட்டடத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தீயணைப்புப் படையினர், பொலிசார், விமானப்படையினரின் உதவியுடன் பெரும் போராட்டத்தின் பின்னர் தீவிபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தீயை அணைப்பதற்கான நீரைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக பலத்த நெருக்கடியை எதிர்கொண்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவி்த்துள்ளனர்.

தீவிபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் அதன் சேதமதிப்பீடுகள் மற்றும் தீவிபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.