சீனாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய 14 வயது சிறுமி அவரது முதலாளி கொடுத்த தண்டனையால் சுவாச செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
Wu(15) என்ற பள்ளி மாணவி தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவருக்கு தேவையான மருந்துகளை வாங்குவதற்காக தனது பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு நிறுவனம் ஒன்றில் பணிக்கு அமர்ந்துள்ளார்.
Guangdong – ல் உள்ள Qfang என்ற நிறுவனத்தில் தனது வயதினை 18 ஆக அதிகரித்து போலியான சான்றிதழ்களை தயார் செய்து பணிக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், அங்கு இவருக்கு வழங்கப்பட்ட பணியை செய்வதற்கு இவருக்கு காலதாமதம் ஆகியுள்ளது.
இதனால் நிறுவனத்தின் முதலாளி இவரை கண்டித்துள்ளார், மேலும் பணியை காலதாமதமாக்கிய குற்றத்திற்காக 100 முறை squat (சப்பனம் போட்டு தரையில் உட்காருதல்) செய்ய வேண்டும் என்ற தண்டனை வழங்கியுள்ளார்.
பணி முடித்து வீடு திரும்பிய Wu, தனது தாயிடம் அலுவலகத்தில் நடந்தவற்றை கூறியுள்ளார்.
மேலும், சில நேரத்தில் தனது கால்களை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார், இதனால் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்துசென்று சோதனை செய்ததில், ஆரம்பத்தில் இவரது கால்களில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின்னர் வாந்தி ஏற்பட்டு உடல்நிலை பாதிப்புக்கு ஆளானார், இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி திடீரென உயிரிழந்தார்.
சுவாச செயலிழிப்பு ஏற்பட்டு இந்த சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும் squat தண்டனையும் இதற்கு ஒரு வகையில் காரணம் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிறுவனம், இது ஒரு பயிற்சி தானே தவிர தண்டனை எதுவும் கிடையாது என தெரிவித்துள்ளது. ஆனால், தனது மகளின் மரணத்துக்கு நிறுவனம் உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் நான் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் எனவும் கூறியுள்ளார்.