மீனவர் பிரச்சினைக்கு தீர்வு!

இராமேஸ்வரம் பாம்பன் அருகே 60 கோடி செலவில் புதிய துறைமுகத்தினை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

_13605655282

இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற காரணத்தினால் மாற்று வழியாக பாம்பனில் துறைமுகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என மீனவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கையினை முன்வைத்து வந்தனர்.

மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய மாநில அரசுகளின் மானியத்துடன் பாம்பனில் புதிய துறைமுகத்தினை அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது.

இதனை தொடர்ந்து மார்ச் 23ஆம் திகதி மீனவசங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்தை நடத்திய தமிழக மீனவளத்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி பாம்பனில் அமைய உள்ள துறைமுகப்பகுதியை மீனவப்பிரதிநிதிகளுடன் மற்றும் மீன்வளத்துறை உயர் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த நிலையில் தற்போது, ராமேஸ்வரம் முதல் குந்துகால் கடற்கரைவரையிலான பகுதியில் கடல் மட்டத்தின் அளவுகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் அளவுகள், நெடுஞ்சாலைக்கும் புதிய துறைமுகத்திற்கும் இடையே மாற்று வழித்தடம் போன்றன குறித்து ஆராய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், புதிய மீன்பிடி துறைமுகத்தால் ஏற்கனவே அப்பகுதியல் மீன்பிடித்து தங்கிவாழ்ந்து வரும் நாட்டுபடகு மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமலும் அவர்கள் பயன்படுத்தி வரும் இடங்களில் துறைமுக கட்டுமான பணிகள் இடம்பெறாவண்ணம் சர்வே பணிகளை மேற்கொன்டு வருவதாக பணியாளர்கள் தெரிவித்ததுள்ளனர்.