இந்தியா இலங்கை மோதும் இன்றைய ஆட்டத்தின் வியக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்…

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இன்று மோதுகிறது.

cri

இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டியின் சில சுவாரசியமான அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள்:

  • இந்தியா இலங்கை மோதும் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் இடையேயான 150வது போட்டி. இரண்டு அணிகள் 150 போட்டிகளில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறை.
  • இந்தியா இலங்கை அணிகள் மட்டும் மோதியுள்ள இருதரப்பு தொடரில், கடைசியாக நடைபெற்ற 8 தொடர்களில் 7ல் இந்தியா வென்றுள்ளது. மீதமுள்ள ஒரு தொடர் சாமானில் முடிந்துள்ளது.
  • இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான தொடரை கடைசியாக 1997ம் ஆண்டு வென்றுள்ளது. இது நடைபெற்றது, இலங்கையின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே அறிமுகம் ஆகும் முன்னர். ஜெயவர்த்தனே மொத்தமாக 448 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி ஒய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தனது 200வது போட்டியில் இன்று களமிறங்குகிறார். இன்னும் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினால் 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய 4வது இலங்கை பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெறுவார்.
  • இதுவரை இரண்டு முறை மட்டும் தான் இலங்கையில் 300 க்கும் அதிகமான ரன்களை வெற்றிகரமாக துரத்த முடிந்துள்ளது. இவை இரண்டுமே சமீபத்தில் முடிந்த இலங்கை ஜிம்பாப்வே தொடரில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
  • கடந்த 2005ம் ஆண்டிற்கு பிறகு, இந்திய அணிக்கு எதிராக இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களின் சராசரி 52 ஆக உள்ளது. இந்திய அணிக்கெதிராக மட்டும் தான் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் இவ்வளவு மோசமான சராசரி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இவ்விரு அணிகளுக்கு எதிரான இருதரப்பு தொடரில் இது 37 போட்டிகளில், 16 முறை இந்தியா முதல் பேட்டிங் செய்துள்ளது. இதில் 8 முறை 300 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளது.
  • இலங்கை அணியில் புதுமுக வீரர்கள் அதிக அளவில் உள்ளனர். அதற்கு ஒரு சான்றாக, இலங்கை அணியின் மலிங்காவை தவிர மற்ற 14 வீரர்களின் ஒட்டுமொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 291 ஆக உள்ளது, ஆனால் மலிங்கா மட்டும் 298 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும் இந்த கூட்டு எண்ணிக்கையில், மேத்தியூஸ் மற்றும் திஷாரா பெரேரா ஆகிய இருவர் மட்டும் 240 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இலங்கை பந்துவீச்சாளர் மலிங்கா பந்துவீச்சில், கோஹ்லி 169 பந்துகளில் 180 ரன்கள் குவித்து ஒரு முறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார், டோணி 167 பந்துகளில் 186 ரன்கள் எடுத்து 3 முறை ஆட்டமிழந்துள்ளார்.