216 ரன்களில் இலங்கையை காலி செய்த இந்தியா

தம்புலாவில் நடைப்பெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இன்று முதல் ஒருநாள் போட்டி தம்புலாவில் நடைப்பெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய நீரோஷன் டிக்வெல்ல மற்றும் குணதிலகா சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தினர். இலங்கை அணி 27வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மெண்டீஸ் ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து வரிசையாக 5 விக்கெட்டுகள் சரிந்தது.

மேத்யூஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இலங்கை அணி 200 ரன்களை கடக்க உதவி செய்தார். 43.2 ஓவரில் இலங்கை அணி 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக டிக்வெல்ல 64 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் அக்‌ஷர் பட்டேல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.