யாழ்.நல்லூர் திருவிழாவைக் கண்டு பிரம்மித்துப்போன அமெரிக்க தூதுவர்

யாழ்.நல்லூர் திருவிழாவையும், அங்கு திரண்டுள்ள மக்களின் பக்தியையும் கண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் பிரம்மித்துப் போயுள்ளார்.

u666

 

“யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வருகைத் தரும் பக்தர்களின் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பக்தி என்பவை மிகவும் சிறப்பான ஒன்று” என தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

atul

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இதில் கந்தனின் அருளை பெற்றுக்கொள்ள உலகின் பல பாகங்களில் இருந்தும் பக்த அடியார்கள் படையெடுத்து வருகைதந்துள்ளார்கள்.

இவ்வாறு யாழில் கூடிய பக்தர்களின் கூட்டத்தைக்கண்டு பிரம்மித்துப்போன அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

மேலும், யாழ். நல்லூர் திருவிழாவின் நேரலைக் காட்சிகள் தற்போது தொலைக்காட்சியினூடாகவும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.