தமக்கு தாமே சேறு பூசிக்கும் கொள்ளும் மோசமான நிலையில் சமகால அரசாங்கம் : மஹிந்த ராஜபக்ஷ

உலகில் இல்லாத வியக்கதக்க அரசாங்கம் இலங்கையில் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

mahintha1

தமக்கு தாமே சேறு பூசிக்கும் கொள்ளும் மோசமான நிலையில் சமகால அரசாங்கம் உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது மஹிந்த இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிலர் பதவிகளில் இருந்து கொண்டே சமகால அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்களிடம் எவ்வித ஒழுக்கமும் இல்லை. மதிப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தில் ஒருவருக்கு ஒருவர் மீது நம்பிக்கை இல்லை. வைராக்கியம், கோபம், பழிவாங்குதல் அதிகரித்துள்ளது.

நாட்டை ஆட்சி செய்வர்கள் இப்படி என்றால் அதற்கு மேல் என்ன உள்ளது. நாட்டில் பௌத்த மதத்திற்கு தடை இல்லை என புத்த சாசன அமைச்சரே கூறுகின்றார்.

ஜப்பான் மோட்டார் சைக்கிள்களை இங்கு குறைந்த விலையில் கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறான எந்தவொரு மோட்டார் சைக்கிள்களும் நாட்டில் இல்லை. ஜப்பானிலேயே இந்த ரக மோட்டார் சைக்கிள்கள் உள்ளதா என தெரியவில்லை.

எல்லாம் வெற்று பேச்சில் மாத்திரம் அடங்கியுள்ளது. அமைச்சர்கள், உறுப்பினர்கள் அரசாங்கம் குறித்து குறை கூறுகின்றார். விமர்சிக்கின்றார்கள், அவ்வாறு கூறிக் கொண்டே அரசாங்கத்தில் செயற்படுகின்றார்கள்.

உலகின் புதுமையான அரசாங்கம் என இதனை கூறினால் தவறில்லை என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.