லண்டனில் சாதித்த இந்திய வம்சாவளி சிறுவன்! வியப்பில் மூழ்கிய பல இலட்சக்கணக்கான பார்வையாளர்கள்

தெற்கு லண்டன் பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு ‘சிறார் மேதை’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை 12 வயதான சேர்ந்த ராகுல் தோஷியின் அறிவுதிறமை பல இலட்சக்கணக்கான பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

london

பிரித்தானிய நாட்டின் பிரபல தொலைக்காட்சி சேனலான “சேனல்-4” கடந்த சில நாட்களாக சிறுவர்களுக்கான அறிவுத்திறன் சார்ந்த வினா-விடை நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளது.

“சிறார் மேதை” (‘Child Genius) என்ற பட்டத்துக்காக கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சியில் 12 வயதுக்குட்பட்ட 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் அந்நாட்டை சேர்ந்த ரோனன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகுல் தோஷி (12) ஆகியோர் மோதியுள்ளனர்.

இந்த இறுதிச் சுற்று நேரடி ஒளிபரப்பை நேற்றைய தினம் அந்நாட்டில் உள்ள பல இலட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்துள்ளனர்.

இதன்போது, கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்த ராகுல் தோஷி, 10-4 என்ற புள்ளிகள் கணக்கில் தனது போட்டியாளரான ரோரனனை வென்றார்.

london1

பிரித்தானியாவில் 18ஆவது நூற்றாண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவ முறைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பாக ராகுல் முன்வைத்த கருத்துகள் பார்வையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைவிட அதிகமான அறிவாற்றல் நிறைந்த மாணவராக கருதப்படும் ராகுல் ஏற்கனவே ‘மென்ஸா கிளப்’ எனப்படும் அறிவுசார் கழகத்தில் உறுப்பினராக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

‘சேனல்-4’ நடத்திய இறுதிச்சுற்றுப் போட்டியில் 19ஆம் நூற்றாண்டுகால கலைஞர்களான வில்லியம் ஹோல்மேன் ஹன்ட் மற்றும் எவெரெட் மில்லய்ஸ் தொடர்பாக ராகுல் அளித்த விளக்கமான பதில் அவரை வெற்றியாளராக அறிவிக்கச் செய்தது.

இதையடுத்து ’சிறார் மேதை’ என்ற பட்டம் ராகுல் தோஷிக்கு வழங்கப்பட்டது.

தெற்கு லண்டன் பகுதியில் வசித்துவரும் ராகுலின் தந்தை மினேஷ் தோஷி, தகவல் தொழில்நுட்பத்துறையில் மேலாளராகவும், தாயார் கோமல் தோஷி மருந்தாளுநராகவும் அங்கு பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.