ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படமான தளபதியின் மெர்சல் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் விஜய் ரசிகர்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதாவது சமீபகாலமாக நெகட்டிவிட்டி ரொம்ப அதிகமானது. அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றால் அதை பற்றி கண்டுகொள்ளாமல் அப்படி விடவேண்டும்.
கத்தி கத்தி tired ஆகி அவங்களே போய்டுவாங்க!” “பிடிக்காதவங்க யாருமே இல்லனா. நாம யாருக்கு prove பண்றது? அப்றோம் Life bore அடிச்சுரும் நண்பா! என்று தனது கிண்டலான பாணியில் தெரிவித்தார்.
மேலும் மெர்சல் படம் எப்படி இருக்கும் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யா கேட்டபோது ”
இந்தப்படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் ஒரு பன்ச் டயலாக்கில் சொல்கிறேன்.
துப்பாக்கினா தோட்டா இருக்கும்
கத்தி ஷார்ப்பா இருக்கும்
தெறி தெனாவட்டா இருக்கும்
இந்த மெர்சல் மிரட்டலா இருக்கும்
என்று அவர் கூறியதும் தைட்டலும், விசிலும் அரங்கத்தை அதிர வைத்தது.