ஆயிரம் பேரை கொண்ட சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம்! காரணம் என்ன?

விசேட அதிரடிப்படையினர் 1000 பேரை கொண்ட சிறப்பு படையணி ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாகவும், இதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SLAF513

பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு படையணி ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அனைத்து நடவடிக்கைகளும் விசேட அதி­ரடிப்படை கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீபின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்த கடந்தவாரம் விசேட பொலிஸ் படையணியானது பொலிஸ் விசேட அதிரடிப் படையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதன் கீழ் வரும் இந்த 1000 பேர் கொண்ட விசேட படையணி ஸ்தாபிக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன.

அந்த படையணியில் இணைத்துக்கொள்ளப்படுவோருக்கு போதைப்பொருள் தடுப்பு, பாதாள உலக கட்டுப்பாட்டு உபாயம் என்பன தொடர்பில் சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.