‘தெறி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘மெர்சல்’. இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இதில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருப்பது நாம் அறிந்ததே.
ஆனால் இவையெல்லாம் பத்தாது என்று மெர்சலில் சந்தானமும் நடித்திருக்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. சில வருடங்களாக காமெடி வேடங்களில் நடிப்பதை நிறுத்திய சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் விஜய் மீதான மரியாதையும், ‘ராஜாராணி’ காலத்து அட்லீயின் நட்பும் சந்தானத்தை மெர்சலில் நடிக்க வைத்திருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
எது எப்படியோ விஜய் ரசிகர்களுக்கு இந்த இனிப்புச் செய்தி இன்ப அதிர்ச்சி என்பதில் சந்தேகமேயில்லை.