யாழில் 9 அரிவாள்களுக்கு மேல் படுத்து நல்லூருக்கு வந்த விசித்திர காவடி!

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நேற்று நிறைவுற்றதைத் தொடர்ந்து இன்று தீர்த்தத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

1

யாழ். மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை நோக்கி காவடிகள் படையெடுத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

அந்த வகையில் இதுவரை யாரும் செய்யாத ஒரு நேர்த்திக்கடனை பக்தர் ஒருவர் செய்துள்ளார்.

பறவை காவடி, தூக்கு காவடி, பால் காவடி, இவ்வாறு பல காவடிகளை இதுவரை நாம் பார்த்திருக்கின்றோம்.

ஆனால் இன்றைய திருவிழாவில் ஒரு இளைஞன் 9 அரிவாள்களுக்கு மேல் படுத்துக்கொண்டு காவடி எடுத்து வரும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இது தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றன.

இதுவரை இவ்வாறான ஒரு நேர்த்திக்கடன் செலுத்துவதையும், அரிவாள்களுக்கு மேல் படுத்து காவடி எடுப்பதையும் பார்த்ததில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தீர்த்த திருவிழாவிலேயே இப்படியான புதுவிதமான பறவை காவடியை காண்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பறவை காவடியை ஆலயத்திற்கு வருகைத்தந்திருந்த பக்தர்கள் அனைவரும் வியப்புடன் பார்வையிட்டுள்ளனர்.

குறித்த பக்தர் வேஷ்டியுடன், 9 அரிவாள்களுக்கு மேல் படுத்துக் கொண்டு பறவை காவடி எடுத்து நல்லூரை நோக்கி வருகைத்தந்துள்ளார்.

2 3