5 ஆயிரம் அல்லது 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த வளர்ச்சியடைந்த ஆதி மனிதர்கள் உருவாக்கிய வரைபடத்தை கண்டுபிடித்துள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் படி நிறுவனத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜா சோமதேவ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கிடைத்துள்ள முதலாவது பெரிய வரைப்படம் இது எனவும் உலகில் இவ்வாறான 19 வரைபடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இது 19வது வரைபடம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள அடுத்த வருடம் அந்த வரைபடம் கிடைத்த சூழலில் மேலும் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பலாங்கொடை ஓபநாயக்க பரகஹமடின்ன, பின்னகல கிராமத்தில் பாதாஹேன கல் குகையில் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட அகழ்வாய்வு பணிகளில் இந்த வரைபடம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கல் குகை சுமார் 200 அடி நீளமானது எனவும் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் இதனை இருப்பிடமாக பயன்படுத்தியிருக்கலாம் எனவும் பேராசிரியர் கூறியுள்ளார்.
இந்த பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட 20 குடியிருப்புகள் இருப்பதாகவும் அது 25 கிலோ மீற்றர் பரப்பளவில் பரந்து காணப்படுவதாகவும் அவற்றில் 4 இடங்களில் தொல்லியல் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் ராஜா சோமதேவ குறிப்பிட்டுள்ளார்.