சற்று முன்னர் அமெரிக்க நாசகாரிக் கப்பலான, யு.எஸ்.எஸ்- ஜோன் மக்கெயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று அறியப்படுகிறது. சிங்கப்பூர் கடலுக்கும் மலாக்கா தீவுக்கும் இடையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று ஆரம்ப கட்ட தகவல் தெரிவித்தாலும். எண்ணையை ஏற்றிக்கொண்டு சென்ற டாங்கர் வகையான கப்பல் ஒன்று, அமெரிக்க நாசகாரி கப்பல் மீது மோதியுள்ளது என்று தற்போது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இது தற்செயலாக நடந்த விபத்தா ? இல்லை திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என்று தெரியாமல் அமெரிக்க கடல் படையினர் குறித்த எண்ணைக் கப்பலை தடுத்து வைத்துள்ளதோடு. அதில் உள்ள அனைவரையும் கைதுசெய்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் றொயிட்டர் செய்திச் சேவை ஊடாக அறிகிறது. இதில் அமெரிக்க கடல்படையை சேர்ந்த 10 பேரைக் காணவில்லை என்றும். இந்த சம்பவத்தில் அவர்கள் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
அமெரிக்கா மீது ஏவுகணைகளை எந்த ஒரு நாடு ஏவினாலும், அதனை நடு வானில் வைத்து அழிக்கவல்ல ஏவுகணைகளை இக்கப்பல் கொண்டுள்ளது. இது நிலைகொண்டுள்ள இடம் மிக முக்கியமானதொன்றாகும். இன் நிலையில் தான், குறித்த கப்பல் மீது , எண்ணைக் கப்பல் மோதியுள்ளது. இருப்பினும் இரண்டு கப்பலும் தீ பற்றிக் கொள்ளவில்லை. இது தொடர்பாக மேலதிக செய்திகளை அதிர்வு இணையம் இன்னும் சற்று நேரத்தில் வெளியிட உள்ளது. அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.