இரசாயனவியல் கேள்விகளை திருடி விற்ற ஆசிரியரின் தந்தை மற்றும் சகோதரன் கைது

கம்பஹா ரத்னவாளி பெண்கள் கல்லூரிக்கு அருகில் கடந்த 19 ஆம் திகதி உயர் தரப்பரீட்சைக்கான இரசாயனவியல் இரண்டாவது வினாத்தாளின் இரண்டு கேள்விகளை அச்சிட்டு விநியோகித்ததாக கூறப்படும் பகுதி நேர வகுப்பு ஆசிரியர் ஒருவரின் தந்தை மற்றும் சகோதரரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

images (10)

பகுதி நேர வகுப்பை நடத்தி வரும் ஆசிரியர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கம்பஹா பிரிவுக்கான குற்றத் தடுப்பு பிரிவின் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கந்தானை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளைய தினம் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.