ஒருவருடைய அனுமதி இன்றி அவர் பாவனை செய்து வரும் ஸ்மார் போன் மற்றும் மடிக்கணினி டெப்லட் போன்ற சாதனங்கள் ஊடாக அதன் பாவனையாளர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இணையம் மூலமாக குறித்த கருவிகளில் உள்ள கெமராக்கள் கண்காணிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் இதன் காரணமாக தேவையற்ற சமயங்களில் கெமராக்களை மூடி உபயோகிக்குமாறும் அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகின் எந்த மூலையிலும் உள்ள ஒருவரையும் இணையம் மூலமாக கண்காணிக்க முடியும் என்பதோடு அவரின் நடவடிக்கைகளையும் பதிவு செய்யலாம். இவ்வாறான ஹெக்கின் நடவடிக்கையினால் ஒருவருடைய தனிப்பட்ட இரகசியங்கள் உட்பட நிறுவன இரகசியங்களும் அம்பலப்படுத்தப் படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய காலகட்டத்தில் இணைய ஹெக்கர்கள் இலகுவாக இந்த வகை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
எனவே கெமராக்களை மறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்வதில் வாடிக்கையாளர்கள் தீவிரமாகி வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை சமூக வலைத்தளங்களில் முன்னணி வாய்ந்த பேஸ்புக்கின் நிறுவுனர் மார்க் சக்கர்பர்க் உட்பட பிரபலங்கள் பலரும் தமது கெமராக்களை மறைத்தே பாவித்துவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.