-
மேஷம்
மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செல வழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். புதுமை படைக்கும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: எதிர்ப்புகள் அடங் கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார் கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்
கள். வியாபாரத்தில் பழைய வேலையாட் களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள். -
கடகம்
கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த பனிப்போர் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆடை, ஆபரணம் சேரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச் சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப் படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும்.
உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். -
கன்னி
கன்னி: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.
-
துலாம்
துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நெடுநாட்க ளாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிறப்பான நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்கு வார்கள். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
தனுசு
தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
-
மகரம்
மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களு டன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.
-
கும்பம்
கும்பம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோ தர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்கு வீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
மீனம்
மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.