அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மோசமான காலம் ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஜோதிடர்கள் ஆரூடம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் இன்றைய தினம் ஏற்படவுள்ள முழுமையான சூரிய கிரகணத்தினால் ஏற்படவுள்ள கிரக மாற்றங்களுக்கு அமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரம்பின் ஜாதகத்திற்கமைய இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும், ட்ரம்பிற்கு அமெரிக்க ஜனாதிபதியாக செயற்படுவது கடினமாக இருக்கும் என சோதிடர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு இந்த சூரிய கிரகணத்தினால் அழுத்தம் ஏற்படும். அது உறுதி என நியுயோர்க் நகரத்தை கேந்திரமாக கொண்ட அமெரிக்காவின் பிரபல சோதிடர் ரெபேக்கா கோடின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று முழுமையான சூரிய கிரணம் ஏற்படவுள்ள நிலையில் இந்த சூரிய கிரகணம் வட அமெரிக்காவுக்கு முழுமையான சூரிய கிரகண காட்சியாக தோன்றும். அத்துடன் இந்த சூரிய கிரகணம் அரை சூரிய கிரகணமாக மேற்கு ஐரோப்பா நாடுகளுக்கும், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் மேற்கு பகுதிகளில் தோன்றும் என கூறப்படுகின்றது.
அடுத்த முழுமையான சூரிய கிரகணம் 2019ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஏற்படவுள்ள நிலையில் அது தென் அமெரிக்காவுக்கு மாத்திரம் தோன்றவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த வருடம் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்படும் வளை வடிவ சூரிய கிரகணம் இலங்கைக்கு தெளிவாக காட்சியளிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.