நேற்று, அமெரிக்காவின் குறிப்பிட்ட சில மாகாணங்களில் சூரிய கிரகணத்தை முழுவதுமாகப் பார்க்க முடிந்தது. இந்திய நேரப்படி, நேற்று இரவு சுமார் 10.20 க்கு சூரிய கிரகணம் தொடங்கியது. இந்தியாவில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியாது. எனினும் இந்த கிரகணத்தின் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும் என்றே கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால், பூமியின் பார்வையிலிருந்து சூரியன் மறையும். இதுவே ‘சூரிய கிரகணம்’.
இந்த ஆண்டில், இதற்கு முன்பு மூன்று முறை கிரகணம் ஏற்பட்டது. பிப்ரவரி 11 -ம் தேதி சந்திர கிரகணம்; பிப்ரவரி 26-ம் தேதி சூரிய கிரகணம்; ஆகஸ்ட் 7-ம் தேதி சந்திரகிரகணம். இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் காண முடிந்தது.
இந்நிலையில், நேற்று நடந்த சூரிய கிரகணத்தின் வீடியோ ஒன்றை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ பதிவு, பியட்ரிஸ் என்னும் இடத்திலிருந்து சூரியன் முழுவதுமாக மறைந்த நிலையில், மிகத் துல்லியமாக எடுக்கப்பட்டுள்ளது.
Here’s #SolarEclipse2017 views of totality in Nebraska! Take a look here and watch our live show for more: https://t.co/cOKssim1bY pic.twitter.com/qFgqf3ZI2s
— NASA (@NASA) August 21, 2017