5வது மாடியில் இருந்து விழுந்த பிள்ளை: துணியை விரித்து பிடித்த பயணி !

ரஷ்யாவில் நடந்த உண்மைச் சம்பவம் இது. மொஸ்கோவின் புறநகர்ப் பகுதி ஒன்றில், பெரும் தொடர்மாடிக் குடியிருப்பு உள்ளது. அதனை சுற்றி சில வனப் பகுதிகள் இருப்பதால். அதனை பார்க்க பல உல்லசப் பயணிகள் செல்வது வழக்கம். இவர்கள் கம்பளங்களையும் கொண்டு செல்வார்கள். இவ்வாறு சென்ற ஒரு குழுவில் உள்ள நபர் ஒருவர். 5ம் மாடி வீட்டின் ஜன்னல் ஓரமாக ஒரு 12 மாத சிறு குழந்தை நின்று கொண்டு இருப்பதை அவதானித்துள்ளார்.

babay escape form deth

அக்குழந்தை நிச்சயம் தரையில் விழும் என்று எண்ணிய அவர், உடனே தான் கொண்டு சென்ற கம்பளத்தை எடுத்து மற்றைய நபர்களோடு இணைந்து. அதனை விரித்துப் பிடித்துள்ளார். இவ்வாறு இவர்கள் செய்து ஒரு செக்கன் கூட ஆகவில்லை. அவர்கள் நினைத்தது போல அக் குழந்தை வீழ்ந்துள்ளது. ஆனால் இவர்கள் விரித்த கம்பளத்தில் தான். எந்த ஆபத்தும் இன்றி உயிர் பிழைத்துள்ளது.

குழந்தையின் அம்மா, அக்குழந்தையை சரியாக கவனிக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க. சமயோசித புத்திகொண்ட அவரை, மக்கள் இன்ரர் நெட் வழியாக புகழ்ந்து தள்ளி, ஹீரோ என்று அழைக்கிறார்கள். அது தான் உண்மையும் கூட…