சிறுமியின் வயிற்றில் உருவாகிய 5 மாத குழந்தையை உடுதும்பர வைத்தியசாலையில் இரகசியமாக புதைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
15 வயது சிறுமியின் குழந்தை ஒன்றே இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தெல்தெனிய நீதவான் என்.எம் பரிக்டீன் உத்தரவிற்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு குறித்த வைத்தியரின் உதவி கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.