யாழ். துப்பாக்கிச்சூட்டில் பலியாகிய பல்கலை மாணவனுக்காக நிர்மாணிக்கப்படும் வீடு

யாழ்ப்பாணம் – கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவனின் குடும்பத்திற்கு வீடு ஒன்டுறை நிர்மாணித்துக்கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

aa1

இதன்படி, உயிரிழந்த மாணவன் சுலக்ஷனின் சொந்த இடமான சண்டிலிப்பாய் – மாகியப்பிட்டி பகுதியில் குறித்த வீடு நிர்மாணிக்கப்பட உள்ளது.

யாழ்ப்பாணம் வரும் அமைச்சர் சுவாமிநாதன் வீட்டுக்கான அடிக்கல்லினை இன்று நாட்டிவைத்துள்ளார்.

குறித்த நிகழ்வில் இராணுவத்தினரும் கலநது கொண்டு, அடிக்கல்லினை நாட்டிவைத்துள்ளனர்.

யாழ். கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யாழ்.பல்கலைக்கழக மாணவன் சுலக்ஷன் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவனின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கப்படும் என ஜனாதிபதியும், அமைச்சர் சுவாமிநாதனும் உறுதிமொழி வழங்கியிருந்தனர்.

இந்த நிலையிலேயே சுலக்ஷனின் குடும்பத்தாருக்கு வீடு நீர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.